Happy Diwali to hill children

Advertisment

கரோனா கால பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது மனித சமூகம். இந்தநிலையில் இந்த வருட தீபாவளியை கடந்து செல்ல ஒவ்வொரு குடும்பங்களும் சிரமப்பட்டு விட்டது.

நிலப்பரப்பில் உள்ளவர்களுக்கே இந்தநிலை என்றால், நிலப்பரப்பின் உயரத்தில் வாழ்கிற அதாவது மலைப் பகுதியில் வசிக்கும் மலைவாசி மக்களுக்கு அவர்களின் குழந்தைகளுக்கு புது துணிகள் வாங்குவது சாத்தியமற்ற ஒன்றுதான். இந்தநிலையில் அவர்களும் புது துணிகள் உடுத்தி தீபாவளிக்கு மகிழ்ச்சியை கொடுத்தால் அதை விட சிறப்பான செயல் வேறு எதுவுமில்லை. அதை செய்து காட்டியுள்ளது ஒரு அமைப்பு.

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சத்தியமங்கலம் நடராஜ் என்பவர் 'சுடர்' என்ற அமைப்பின் மூலம் மலை மக்களின் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, முன்னேற்றத்திற்காக பணியாற்றி வருகிறார். இந்த அமைப்பு மூலம் திருப்பூர் பனியன் தொழிலதிபர்களின் உதவியால் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் மலையில் உள்ள கொங்காடை என்ற மலை கிராமத்தில் வசிக்கும் கல்வி பயில்கிற150 குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டது. மலை வாசி குழந்தைகள் மகிழ்ந்து விட்டார்கள்.