Advertisment

விஜயகாந்துக்கு பிறந்தநாள் - தலைவர்கள் வாழ்த்து!

Happy Birthday to Vijaykanth- Leaders Congratulations!

தேமுதிகவின் நிறுவனரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் 69வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி., மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisment

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தே.மு.தி.க. நிறுவனரும் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் விஜயகாந்த் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்."இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "எளியோருக்குப் பாதிப்பு என்றால் தன் வரம்பில் இயன்றதை அதிரடியாகவும், உடனடியாகவும் செய்து துயர்துடைக்கும் மனம் வாய்ந்த நண்பர் கேப்டன் விஜயகாந்துக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

birthday vijayakanth dmdk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe