Advertisment

வைகோவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

Happy Birthday to Chief Minister MK Stalin for Vaiko MP!

ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திராவிட இயக்கத்தின் போர்வாளாகவும், நாடாளுமன்றத்தில் தனது விவாதங்களால் நடுங்க வைக்கும் அனலாகவும், கொண்ட கொள்கைக்காக இடைவிடாத போராளியாகவும் வலம் வரும் என் ஆருயிர்சகோதரர் வைகோவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Advertisment

அவரது சொல்லும், செயலும் நூறாண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்! என்று தமிழ்நாடு முதலமைச்சர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வைகோவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் வைகோவுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்". இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chief minister mdmk Tamilnadu vaiko
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe