Hanuman Jayanti Festival

நேற்று (02.01.2022) தமிழகம் முழுவதும் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டதையொட்டி பல்வேறு கோயில்களில் ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி கல்லுகுழி ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1 லட்சத்து 8 வடைகளை கொண்ட வடை மாலைகள் சாற்றப்பட்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்ட வடைகள் வழங்கப்பட்டது.

Advertisment