Skip to main content

‘ஆஞ்சநேயர் வந்திருக்கிறார் வழி விடுங்க...’ - பரவசத்தில் உறைந்த பக்தர்கள்

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

 "Anumaram has come.." - Devotees frozen in ecstasy

 

திருப்பூரில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றில் வடமாநில இளைஞர் ஒருவர் அனுமனைப் போல சைகையில் ஈடுபட்டது கோவிலில் இருந்த பக்தர்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஊட்டியது. அதனைப் பலரும் செல்போன்களில் படம் பிடித்துச் சென்றனர்.

 

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அழகுமலை பகுதியில் உள்ளது முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில். இந்தக் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்று வரும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அதே கோவில் பகுதியில் காரிய சித்தி ஆஞ்சநேயர் என்ற ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது.


 

 "Anumaram has come.." - Devotees frozen in ecstasy

 

ஆஞ்சநேயருக்கு தீபாராதனை காட்டி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த பொழுது மஞ்சள் நிற டி-ஷர்ட் அணிந்திருந்த வட மாநில இளைஞர் ஒருவர் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த தேங்காயை பல்லாலேயே மட்டையை உரித்து குரங்கு போலவே செய்கை காட்டினார். புரியாத ஏதோ ஒரு பாஷையில் பேசிக்கொண்டு மடமடவென பற்களால் தேங்காய் மட்டையை உரித்த அந்த இளைஞர், தனது தலையிலேயே தேங்காயை உடைத்து தனக்குத்தானே தேங்காய் குளியல் அபிஷேகம் செய்துகொண்டார். மேலும் தேங்காயை பற்களால் கீறி குரங்கு போல் சாப்பிட்டார். அங்கிருந்தவர்கள் 'ஆஞ்சநேயர் வந்திருக்கிறார்' என வினோதமாக திகைத்து நின்று, கையில் இருந்த செல்போன்களில் வீடியோ எடுத்தனர். அங்குமிங்கும் ஓடிய அந்த இளைஞர் ஆஞ்சநேயர் போலவே சைகை செய்ததால் பரவசம் அடைந்த பக்தர்கள், ஆச்சரியத்துடன் பார்வையை அங்கும் இங்கும் நகர்த்தாமல் உறைந்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர். தற்பொழுது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.