Advertisment

“எதிர்க் கட்சித் தலைவர் கொஞ்சம் திரும்பி பாக்கணும்..” - அமைச்சர் காந்தி பேச்சால் அவையில் சிரிப்பலை!

Handloom textile industry grant minister R Gandhi

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான மானியக் கோரிக்கைகளும், விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இளைஞர் நலன் மற்றும் கைத்தறி துணி நூல் துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது.

Advertisment

இதில் பேசிய அமைச்சர் ஆர்.காந்தி தனது துறையில் நடத்தப்பட்ட தள்ளுபடி மற்றும் பல்வேறு செயல்களை விளக்கினார். தொடர்ந்து பேசிய அவர், “வேட்டி சேலை வழங்கும் திட்டம்; இதுகுறித்து நீங்க (அதிமுக) நிறைய பேசிட்டீங்க. 2023ம் ஆண்டு திட்டத்தில் முதல் என்னை அழைத்து, ‘அரசு செலவு செய்கிற ரூ. 499 கோடியை மக்கள் சரியாக உபயோகிக்க வேண்டும். வேட்டி சேலைகளை மக்கள் உபயோகிப்பதில்லை. அதனால், அதனை எப்படித்தரமாக செய்ய வேண்டுமோஅப்படி செய்யுங்கள்’ என ஆணையிட்டார்.

Advertisment

அவரது கோரிக்கையை ஏற்று தரமான வேட்டி சேலையை வழங்கினோம். அதற்காக கொஞ்சம் தாமதமானது. அதனை நாங்கள் இல்லை என்று சொல்லவே இல்லை. எதிர்க் கட்சித் தலைவர், அவர்கள் இருக்கும் போது என்ன நடந்தது என்று கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும்” அமைச்சர் இதை முடித்ததும் அவையில் சிரிப்பலை எழுந்தது) தொடர்ந்து பேசிய அவர், “இந்த ஆண்டு வழங்கிய வேட்டி சேலையில் ஒரு புகாரும் வரவில்லை” என்று பேசினார்.

Handlooms minister
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe