
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்டதை அடுத்து மாநில வளர்ச்சி, கொள்கை குழு, நீட் தேர்வால் ஏற்பட்டபாதிப்புகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்ககுழு என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில் இன்று (13.07.2021) தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கைத்தறி, கைத்திறன், துணிநூல், கதர்துறை ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் சில அறிவுறுத்தல்களை முதல்வர் வழங்கியுள்ளார். அரசு ஊழியர்கள் வாரத்தில் இரண்டுமுறை கைத்தறி ஆடையை உடுத்த வேண்டும்.அனைத்து வயதினருக்கும் ஏற்ற கைத்தறி ஆடைகளை வடிவமைக்க வேண்டும். கைத்தறியை உயர் வருவாய் பிரிவினரிடம் கொண்டு சென்று நெசவாளர்களின் வருவாயை உயர்த்திட வேண்டும் என சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.