சிக்கியது ஆட்டுக்கறிதான்; ஆய்வில் தகவல்!!

meat

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தலைநகரத்தையே அதிரவைத்த நாய்க்கறி சர்ச்சையில் "சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறியா? இல்லை ஆட்டுக்கறியா? என்று பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவந்த நிலையில், கைப்பற்றப்பட்டது ஆட்டுக்கறி என்று ஆய்வில் ஊர்ஜிதமாகியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து சென்னை ஹோட்டல்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட 'கறி பார்சல்'கள் ஆட்டுக்கறிபோல் இல்லை என்ற சந்தேகம் எழுந்ததால் கைப்பற்றப்பட்ட 'கறி பார்சல்' சென்னை வெப்பேரியிலுள்ள தமிழக அரசின் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு பரிசோதனைக்குஅனுப்பி வைக்கப்பட்டது.

இன்று காலை கூட இது தொடர்பாக விசாரிக்க தனிப்படை ஜோத்பூர் சென்ற நிலையில் தற்போது கால்நடை கல்லூரியின் ஆய்வு முடிவில் கைப்பற்றப்பட்டது ஆட்டுக்கறி என்று உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Chennai meat
இதையும் படியுங்கள்
Subscribe