Advertisment

நிர்கதியான மாற்றுத்திறனாளி பெண்; கலெக்டரிடம் கண்ணீர் மல்கக் கோரிக்கை

handicapped person made a tearful request to the collector with no way to live

கரூர் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்வாதாரம் வேண்டி ஒன்பது வயது மகனுடன் கணவரால் கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளிபெண்மணி கண்ணீர் மல்கக் கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisment

கரூர் மாவட்டம்,காணியாளம்பட்டி அடுத்த சுண்டுக்குழிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பானுமதி (35). ராமசாமி என்பவர் உடன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 9 வயதில் மகன் உள்ளார். பானுமதி மாற்றுத்திறனாளி என்று தெரிந்து திருமணம் செய்துகொண்ட கணவர் ராமசாமி, மகன் 1 வயது குழந்தையாக இருக்கும்போது இவரைக் கைவிட்டுச் சென்றுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்வாதாரம் வேண்டி பானுமதி மனு அளித்தார். அந்த மனுவில் அரசு சார்பில் குடியிருக்க வீடு அல்லது சுயதொழில் செய்வதற்கான பொருளாதார உதவி செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். பிறவியிலேயே மாற்றுத்திறனாளியாக இருக்கும் பானுமதியை உடன்பிறந்தவர்களும் வீட்டை விட்டு வெளியேற்றியதால் தனது மகனையும்தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் வாழ்வாதாரம் வேண்டி கண்ணீர் மல்கக் கோரிக்கை வைத்துள்ளார்.

karur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe