உலக அளவில் ஒவ்வோரு ஆண்டும் அக்டோபர் 15ஆம் தேதி கை கழுவுதல் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் உலக கைகள் கழுவும் தினம் விழா நடைபெற்றது. இதில் கை கழுவும் முறைகள் குறித்தும் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக சோப்புகளை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பங்கேற்ற மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சோப்புகளால் கைகளைக் கழுவி அவற்றின் முக்கியத்துவத்தை விளக்கினர்.
மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கைகள் கழுவும் தின விழா! (படங்கள்)
Advertisment
Advertisment