Advertisment

ஈரோடு கிழக்கில் குக்கர் - வைரலாகும் வீடியோ

A hand from the cooker?-Video goes viral

Advertisment

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், பெண் ஒருவர் வாக்குசெலுத்த குக்கர் கொடுக்கப்பட்டதாக வெளியான வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. அதில், புதிய குக்கர் ஒன்றுடன் இருக்கும் பெண் ஒருவர் எனக்கும் எங்க கொழுந்தனார் வீட்டுக்கும் குக்கர் கொடுத்துருக்காங்க. வீட்டுக்கு ஒரு குக்கர் என குக்கரை எடுத்துக் காட்டுகிறார். எந்த சின்னத்துக்கு ஓட்டு போடச் சொல்லி குக்கர் கொடுத்தார்கள் எனக் கேட்க 'கை' என அப்பெண் கூறினார். தற்பொழுது இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

byelection Erode
இதையும் படியுங்கள்
Subscribe