/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a72603.jpg)
கொலை செய்யப்பட்ட குமார்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் தாயுடைய ஆண் நண்பரை மகன் சுத்தியால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உட்பட்டது தலைமலை பகுதி. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த பகுதியில் வசித்து வருபவர் முத்துமணி. இவர் தன்னை விட மூன்று வயது சிறியவராக உள்ள குமார் என்பவருடன் முறையற்ற தொடர்பில்இருந்ததாக கூறப்படுகிறது. இதனை முத்துமணியின் மகன் கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு மேலாக காணாமல் போன குமாரை போலீசார் தேடி வந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a72602.jpg)
கைது செய்யப்பட்ட நாகமல்லு, மாதேஸ்வரன், முத்துமணி
தொடர்ந்து தொட்டபுரம் வனப்பகுதியில் இருந்து அழுகிய நிலையில் குமாரின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து முத்துமணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தோட்டத்தில் தன்னிடம் குமார் தனியாக பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்து தன்னுடைய மகன் நாகமல்லுகையில் வைத்திருந்த சுத்தியலால் குமாரை நெற்றியில் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே குமார் உயிரிழந்ததாகவும் குமாரின் உடலை மகன் நாகமல்லுவும் அவருடைய நண்பரான மாதேஸ்வரனும் சேர்ந்து வனப்பகுதியில் தூக்கி எறிந்ததாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாகமல்லு, மாதேஸ்வரன், முத்துமணி ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நெற்றியில்சுத்தியால் அடித்துக் கொல்லப்பட்டு வனப்பகுதியில் வீசப்பட்ட இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)