Hall ticket release for Naan Multuvan evaluation exam

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும், சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. போட்டித் தேர்வுப் பிரிவு தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வகையில் பல பயிற்சித் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

Advertisment

அந்தவகையில் 2023 - 24 க்கான தமிழக அரசின் பட்ஜெட் உரையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுக் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் 1000 மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் 7,500 ரூபாய், பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த ஊக்கத்தொகைக்காக 1000 மாணவர்களைத்தேர்ந்தெடுப்பதற்காக கடந்த 2 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த 17 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

Advertisment

இந்நிலையில் நான் முதல்வன் மற்றும் அகில இந்தியக் குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான மதிப்பீட்டுத் தேர்வு 10.09.2023 அன்று நடைபெறும் நிலையில், இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று (30.08.2023) வெளியிடப்பட்டுள்ளது. நான் முதல்வன் ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நான் முதல்வன் திட்ட போட்டித் தேர்வுகள் பிரிவு இயக்குநர் தெரிவித்துள்ளார்.