வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

Hall Ticket Release for block Education Officer Exam

வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டிற்கான வட்டாரக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்வதற்கான தேர்வு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வினை எழுத 42712 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் இத்தேர்விற்கு விண்ணப்பத்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமானhttps://www.trb.tn.gov.in இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் தேர்வர்கள் அவர்களது பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்ஆகியவற்றைப் பதிவு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்
Subscribe