/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01-art-img-trichy-half.jpg)
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை நாச்சிக்குறிச்சி அருகே உள்ள ஆற்றில்குளிக்கச் சென்ற இருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி வாசன் நகர் 16-வது குறுக்கு தெருவைச்சேர்ந்த சண்முகம் என்பவருடைய வீட்டிற்கு அரையாண்டு விடுமுறைக்காகமண்ணச்சநல்லூர் அய்யம்பாளையம் நல்லக்கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் நந்தகுமார் (வயது 15) வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை சண்முகம்,நந்தகுமார் ஆகிய இருவரும்குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள ஆற்றுக்குச் சென்றுள்ளனர்.
ஆற்றில் தண்ணீர் அதிகமாக ஓடும் நிலையில், நந்தகுமார் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார். அவர் நீரில் மூழ்குவதைப் பார்த்த சண்முகம் அவரை காப்பாற்றுவதற்காகச்சென்றுள்ளார். இதில் இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இது குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்குக் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்புத்துறையினர், இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில் நந்தகுமார் மட்டும் தற்போது பிணமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றொருவரைத்தேடும் பணி நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)