Advertisment

திண்டுக்கல்லில் ஐந்து காசுக்கு அரை பிளேட் பிரியாணி!

பூட்டுக்கு பெயர் போன திண்டுக்கல் சமீப காலமாகவே பிரியாணிக்கும்பெயர் போய் வருகிறது. அந்த அளவுக்கு திண்டுக்கல் என்றாலே பிரியாணி என்று சொல்லுமளவிற்கு திண்டுக்கல் பிரியாணிக்கு பெயர் போய் வருகிறது.

Advertisment

இந்த நிலையில் தான் நேற்று உலக உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் எத்தனையோ பிரபலமான பிரியாணி கடைகள் இருந்தும்கூட சமீபத்தில் உழைப்பால் முன்னேறிய முஜிப் பிரியாணி கடை ஐந்து காசுக்கு அரை பிளைட் பிரியாணியை மக்களுக்கு இலவசமாக வழங்கினார்கள்.

biriyani

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே முஜிப் பிரியாணி கடையை கடந்த ஏழுவருடங்களாக ஷேக் முஜிபுர்ஹ்மானும், அவருடைய உடன் பிறந்த சகோதரரன பிலால் உசேனும் நடத்தி வருகின்றார்கள். இந்தநிலையில்தான் உலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணியை மக்களுக்கு கொடுக்க முடிவு செய்தார்கள். அதன் அடிப்படையில் 90 ரூபாய் பெருமானமுள்ளஅரை பிளைட் பிரியாணியை ஐந்து பைசா கொண்டுவரும் 150 பேர்களுக்கு வழங்க முடிவு செய்தனர். இந்த விசயம் பொதுமக்களின் கவனத்திற்கு சென்றதையடுத்துசெல்லாத பழைய 5 காசு நாணயத்துடன் பொதுமக்கள் கடை முன் பெருந்திரளாக திரண்டதின் பேரில் ஒவ்வொருரிடமும் ஐந்து பைசாவை வாங்கி கொண்டு அரைபிளேட் (சிக்கன்) பிரியாணியோடு தால்சா தயிர் வெங்காயத்துடன் பார்சலாக போட்டு கொடுத்தனர்.

Advertisment

biriyani

இதுபற்றி ஷேக்முஜிபுர் ரஹ்மானிடம்கேட்டபோது... முதலில் தள்ளுவண்டி கடைபோட்டு பிரியாணி கடை நடத்தி வந்தோம் அதன்பிறகுதான் முஜிப் என்ற பெயரில் பிரியாணி கடையை நடத்தி வருகிறோம். இந்த நிலையில் தான் கலாச்சாரம் நாகரீகத்தை உணர்த்தும் நாணயங்களின் பெருமையை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செல்லாத ஐந்து பைசா நாணயத்தை சேகரித்து வைத்து இருக்கும் அவர்களுக்கும் பெரும் மதிப்பு கொடுக்க வேண்டும் அதோடு இன்றைய தலை முறையினர் நாணயத்தின் மதிப்பை உணர வேண்டும் என்பதற்காக உலக உணவு தினத்தில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இதைக்கண்டு மற்ற கடைக்காரர்களும் மக்களுக்கு செய்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் இப்படி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினோம்.

briyani

மேலும் புதன் கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் இரண்டு அரை பிளைட் பிரியாணி வாங்கும் நபர்களுக்கு அரைபிளேட் பிரியாணி இலவசமாகவும் கொடுக்க இருக்கிறோம். அதோடு மாணவ மாணவிகளுக்கும் சலுகை விலையில் பிரியாணிகள் கொடுக்கிறோம் அதுபோல் முதியோர் இல்லங்களுக்கு உணவு தானம் அதற்கான தயாரிப்பு செலவை மட்டும் பெற்றுக்கொண்டு பிரியாணி தயார் செய்து கொடுக்கிறோம் இப்படி எங்களால் முடிந்த அளவுக்கு பொது மக்களுக்கும் உதவி செய்து வருகிறோம் என்று கூறினார்.

இப்படி ஐந்து பைசா வுக்கு அரை பிளேட் பிரியாணி கொடுத்தது திண்டுக்கல் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

briyani Dindigul district food
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe