Skip to main content

அரை நிர்வாணமாக மாணவர்கள் ராகிங்; பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல்- மருத்துவக் கல்லூரியில் அதிர்ச்சி

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

Half-naked students raging; Sexual Harassment- Trauma in Medical College

 

வேலூர் மாவட்டம் பகாயம் பகுதியில் செயல்படும் தனியார் மருத்துவக்கல்லூரி விடுதியில் சீனியர் மாணவர்கள் முதலாமாண்டு மாணவர்களை ராகிங் செய்துள்ளனர். 

 

முதலாமாண்டு மாணவர்களை அரை நிர்வாணத்துடன் விடுதியைச் சுற்றி வரச் செய்து ராகிங் செய்துள்ளனர். மேலும் அம்மாணவர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியும் அவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் முட்டைகளை வீசியும் சித்ரவதை செய்துள்ளனர். 

 

இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாகப் பரவியது. இந்நிலையில் ராகிங் செய்த 7 மாணவர்களை அக்கல்லூரியின் ராகிங் கமிட்டியினர் சஸ்பெண்ட் செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும் இது குறித்து விசாரணை செய்யும் கல்லூரி நிர்வாகத்தினர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 

 

இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை இயக்குநர் விக்ரம் மேத்யூஸ் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெயர் குறிப்பிடப்படாமல் கடிதம் ஒன்று எங்களுக்கு வந்தது.  கடிதம் தொடர்பாக விசாரணயைத் துவங்கியுள்ளோம். ராகிங் செயல்பாடுகளை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. சட்ட விதிப்படி அனைத்து நடவடிக்கைகளையும் துவங்கியுள்ளோம். விசாரணை முடிந்த பிறகு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” எனக் கூறினார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரற்ற சடலங்களுக்கு இவ்வளவு மதிப்பா? மாற்றி யோசித்த கேரள அரசு!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Kerala earned revenue by selling corpses

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

சென்னையில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
chennai mit college issue

சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. (M.I.T.) என்ற பெயரில் பிரபல பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கல்லூரிக்கு இன்று (06.03.2024) மாலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னை காவல்துறையின் சார்பில் மோப்ப நாயை கொண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாகச் சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், இன்று காலை சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வெடிக்கும் என பெங்களூரு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.