Barber workers on hunger strike in Trichy tomorrow

Advertisment

மருத்துவர் சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு கேட்டும், சட்ட பாதுகாப்பு வழங்கக் கோரியும், இதுகுறித்து சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வலியுறுத்தியும் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் என மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரம் சலூன் கடைகளை அடைத்து உண்ணாவிரதபோராட்டம் நடத்தப்படுகிறது.

இந்த உண்ணாவிரத போராட்டம் நாளை (25.02.2021) காலை 10 மணிக்கு, திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெற உள்ளது.எனவே, நாளை திருச்சி மாவட்டத்தில் உள்ள சலூன் கடைகளை அடைத்து தொழிலாளர்கள் குடும்பத்தோடு உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என முடி திருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.