/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/VASANTHAKUMAR_0.jpg)
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவரும், கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினருமானஎச். வசந்தகுமார் நேற்று (28/08/2020) மாலை சென்னையில் காலமானார்.
எச். வசந்தகுமார் மறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர், தெலங்கானா ஆளுநர், தமிழக ஆளுநர், தமிழக முதல்வர், துணை முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
வசந்தகுமார் எம்.பி. உடல் சென்னை தி.நகர் நடேசன் தெருவில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்து காங்கிரஸ் கோடி போர்த்தப்பட்டு ஆம்புலன்சில் உடல் கொண்டு செல்லப்பட்டது.
பொதுமக்கள், வசந்த் அன் கோ நிறுவன ஊழியர்களும் வசந்தகுமார் எம்.பி. உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காலை 10.30 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வசந்தகுமார் எம்.பி.உடல் அவரது வீட்டில் வைக்கப்படுகிறது. அதன்பிறகு, காலை 10.30 மணிக்கு மேல் காங்கிரஸ் தலைமை அலுவலகமான் சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது.
மதியம் 02.00 மணிக்கு மேல் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்துக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. நாளை (30/08/2020) காலை 10.00 மணியளவில் அகஸ்தீஸ்வரத்தில் வசந்தகுமார் எம்.பி. உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)