பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது மிகுந்த வேதனை தருகிறது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தன் டிவிட்டர் பதிவில் கூறியதாவது, தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு மறைமுகமாக பதிலளிக்கும் வகையில், பாஜக மாநில் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தன் டவிட்டர் பதிவில் கூறியதாவது,
பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது மிகுந்த வேதனை தருகிறது. எந்தக்கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது தவறு என அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தன் டவிட்டர் பதிவில் கூறியதாவது,
பெண்கள் அரசியலில், பொது வாழ்வில் வந்தாலே அவர்களை மலினப்படுத்தியும், கீழ்த்தரமாக விமர்சித்தும், அவர்களின் உடல் நிலை, முக அமைப்பு இவைகளை பற்றி நாகரீகமற்ற முறையிலும் ஆபாசமாகவும் சித்தரிக்கும் போக்கு கவலைக்குரிய வகையில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்த கீழ்மைக்கு அவர்களின் தகுதி, பதவி, கல்வி அறிவு இது ஒன்றும் தடை இல்லை. பெண்களை வெறும் போகப்பொருளாக, ஒரு நுகர்வு பண்டமாக அல்லாமல் சக மனுஷியாய், தாயாய், மகளாய், சகோதரியாய், தோழியாய் பாருங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.