Skip to main content

எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி கோரிக்கை

Published on 07/03/2018 | Edited on 07/03/2018


எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தனியரச, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ., மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,

 

karunas thamimun ansari thaniyarasu


பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா அவர்கள் சமீபகாலமாக சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசி வருவதை தமிழ்நாட்டு மக்கள் சிறிதும் விரும்பவில்லை.
 

தமிழின பற்றாளர்களையும், திராவிட சிந்தனையாளர்களையும், சிறுபான்மையின மக்களையும்  அவர் தொடர்ந்து  இழிவு படுத்தி வருகிறார். இப்போது திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப்பட்டதை வரவேற்று, அதேபோல் தமிழகத்தில் பெரியார் சிலையையும் தகர்ப்போம் என கருத்து கூறியிருப்பது தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.
 

 திரிபுராவில் லெனின் சிலைகளும், திருப்பத்தூரில் பெரியார் சிலையும் தற்போது மீரட்டில் அம்பேத்கர் சிலையும் சேதப்படுத்தி இருப்பது நாடெங்கிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இவை அனைத்திற்கும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களே பொறுப்பாகும். இவை அனைத்தையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். 
 

லெனின் ஏழைகளின் குரலாக உலகமெங்கும் ஒலிப்பவர். அம்பேத்கர் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிப்பவர், தந்தை பெரியார் அவர்கள் சமூக நீதியின் குரலாக ஒலிப்பவர். இதை எச்.ராஜா போன்றவர்கள் உணர வேண்டும். கடும் எதிர்ப்பை தொடர்ந்து, தனக்கு தெரியாமல் தனது "அட்மின்" அக்கருத்தை பதிவிட்டிருப்பதாக சொல்வது நம்பும் படியாக இல்லை.
 

H. Raja


 
மேலும், இவ்விஷயத்தில் சம்பந்தமே இல்லாமல் பசும்பொன் தேவர் ஜயா அவர்களை முன்னிருத்தி, எச்.ராஜா தப்பிக்க முயல்வதையும் வன்மையாக கண்டிக்கிறோம். பசும்பொன் தேவர் ஐயா ஆன்மீக வாதியாகவும், மத நல்லிணக்க வாதியாகவும் திகழ்ந்தவர், வன்முறைகளுக்கு எதிரானவர், அவர் ஒரு ஜனநாயக வாதி என்பதை எச்.ராஜா போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எச்.ராஜா தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருவதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். பெரியார் மீது அன்பு கொண்ட தமிழக மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

'தினம் 10 பொய்களைப் பேச வேண்டும் என்பதே அவரின் திட்டம்'-கருணாஸ் பரப்புரை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'His plan is to lie 10 days a day' - Karunas lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தின் தலைவர் கருணாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில், ''தமிழ்நாட்டுக்காரர்கள் கேனையர்கள் கிடையாது. மக்கள் மீது அதிகாரத்தை திணிப்பது தான் பாஜகவின் அரசியல். சமூக நீதி மறுப்பதுதான் சனாதனம். தமிழ்நாட்டில் சமூக நீதி என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அது எங்கெல்லாம் மறுக்கப்படுகிறதோ அதுதான் சனாதனம். ஆண்டாண்டு காலமாக கீழடியில் நமது வரலாற்றை பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது. அப்படிப்பட்ட நம் தாய்மொழி தமிழ் மொழி திட்டமிட்டு பாஜகவால் அழிக்கப்படுகிறது. மக்களுக்கான எந்தச் செயலையும் செய்யாமல் தினமும் 10 பொய்களைப் பேச வேண்டும் என்பது பிரதமரின் செயல்பாடு அவருடைய திட்டம்'' என்றார்.