mutharasan

எச்.ராஜாவை தமிழக அரசு உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்.

Advertisment

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு கூட்டம் நாகப்பட்டினத்தில் நடந்தது. அதற்கு தலைமை தாங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "மாணவிகளுக்கு அழைப்பு விடுத்ததில் பேராசிரியை மட்டும் குற்றவாளி அல்ல. அரசியலிலும், ஆட்சி மன்ற பொறுப்பில் உள்ளவர்களுக்கும் தொடர்பு உண்டு. இதனை தீர விசாரிக்க வேண்டும். ரஜினி அவர் நடிக்கும் படங்களை ஒட்டுவதற்காகவே மாவட்ட ரீதியாக பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். அரசியலுக்காக அல்ல. காவிரிக்காக திமுகவுடன் கைகோர்த்த கூட்டணி வரும் பாராளுமன்றம், சட்டமன்ற தேர்தலிலும் தொடர வேண்டும் என்பதே எங்களது விருப்பம். காவிரிக்காக போராடும் அரசியல் கட்சியினரையும் திரையுலகத்துறையினரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை தமிழக அரசு உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" என கூறினார்.