இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா 'ஜெய் பீம்' படத்தில் நடித்துள்ளார். இதில் மணிகண்டன், ரஜிஷா விஜயன், லியோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பழங்குடி மக்களின் பிரச்சனைக்கு எதிராக குரல் கொடுக்கும் வக்கீலாக நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். இப்படத்தை 2டி என்டர்டைன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஓடிடியில் நேற்று வெளியான இந்த திரைப்படத்திற்கு அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட சிலர் அப்படத்தை விமர்சித்தும் வருகிறார்கள். இந்நிலையில் இந்த படம் தொடர்பாக பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா ட்விட் செய்துள்ளார், அதில், " நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.