Advertisment

எச்.ராஜா மின்மினி பூச்சுபோல விளம்பரம் தேடிவருகிறார்; அமைச்சர் ஒ.எஸ்.மணியன் சாடல்!!

கல்வி மற்றும் மொழி கொள்கைகளில் தன் எண்ணம் போல் செயல்படுகிறது மத்திய அரசு ,பி,ஜே,பியை சேரந்த எச்.ராஜாவொ மின்மினி பூச்சு போல, தன்னை அனைவரும் பார்க்கவேண்டும் என்பதற்காக ஜனநாயகத்திற்கு விரோதமாக பேசி வருகிறார், என தனக்கே உரிய நக்கல் பாணியில் கூறியிருக்கிறார் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.

Advertisment

os maniyian

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு பிரைவேட் ஸ்கூல் அசோசியன் சார்பில், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு, அப்துல் கலாம் முதன்மை சிற்பிகள் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசுகையில், "மாநில பட்டியலில் இருந்த கல்வியை மத்திய பட்டியலுக்கு மத்திய அரசு மாற்றியுள்ளது, மத்திய,மாநில அரசுகளின் புதிய கல்வி கொள்கைக்கு மாணவர்களை தயார் படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படிருக்கிறது. தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகள் தான் என்றிருந்த கல்வியில் மத்திய அரசு தன் எண்ணம் போல் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து நிர்ப்பந்தம் செய்வதால், மாநில அரசு பல்வேறு சங்கடங்களையும், சிக்கல்களையும் சந்திக்கிறது." என்று முடித்தார்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓஎஸ்.மணியன், "மரபு மீறி பேசுபவர்கள் விளம்பரம் தேடி பேசுபவர் ஹெச்.ராஜா. அவர் ஒரு மின்மினி பூச்சு போல, தன்னை அனைவரும் பார்க்கவேண்டும் என்பதற்காக இதுபோன்று ஜனநாயகத்திற்கு விரோதமாக பேசி வருகிறார். தெருவில் கிடந்த என்னை சட்டமன்றத்துக்கு கொண்டு வந்து வைத்தவர் ஜெயலலிதா என்று கூறிய MLA கருணாஸ், தற்போது இப்படி வரம்பு மீறி முதல்வரை பற்றி அவதூறாக பேசி இருப்பது அந்த தொகுதி மக்களுக்கும், அவரை நம்பி வாக்களித்தவர்களுக்கும் செய்த துரோகம். ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் கைது காவல்துறையிடம்தான் இருக்கிறது. "என்று முடித்துக்கொண்டார்.

admk Os Manian
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe