Advertisment

7 பேரை விடுதலை செய்ய சொல்றது தமிழ் உணர்வா? சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யனும்- எச்.ராஜா பேட்டி!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் பேரணி இன்று நடந்தது. இந்த பேரணியில் கலந்து கொண்ட பா.ஜ.க தேசிய தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசும் போது,

Advertisment

சீமான் போன்ற தேசத் துரோகிகளை கைது செய்ய வேண்டும் என்று ஊடகங்கள் விவாதிக்க வேண்டும்.யாரோ புள்ளை பெத்தா சீமான் இன்சியல் போட்டுக்குவாரா?

தமிழ் இனத்தை அழிப்பார் இந்த சீமான். காங்கிரஸ்காரங்க எப்ப இந்த நாட்டுக்காக பேசி இருக்காங்க. என்றைக்கு இந்த மண்ணில் பிறக்காதவரை தலைவர் என்று சொன்னார்களோ அப்போதே அவர்களுக்கு இந்த மண் மீது பக்தி இல்லை. சீமான் போன்ற தீய சக்தி, பிரிவினைவாத சக்திகள் தமிழக இளைஞர்களை திசை திருப்புகிறார்கள். அதனால் அவரால் மிகப் பெரிய யுத்தத்திற்கு தமிழகம் தயாராக இருக்க வேண்டி இருக்கும்.

H RAJA INTERVIEW IN PUDUKOTTAI

Advertisment

சீமானைஉடனே கைது செய்யனும். பச்சை தேச துரோகி. தமிழக அரசு அவரை கைது செய்து சிறையில் அடைக்கனும் என்று சொல்லி இருக்கிறேன். ஈழத்தமிழர்களு்காக சீமான் என்ன செய்திருக்கிறார். எள் முனையளவும் நல்லது செய்யல. இலங்கை பிரச்சனைக்காக என்ன செய்த்திருக்கிறார்.? ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட போது தமிழக போலீசார் செத்திருக்காங்க. அதனால அந்த 7 பேரை விடுதலை செய்ய சொல்றது தமிழ் உணர்வா, தேசத் துரோகிகள். அதனால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யனும்.

தி.மு.க 2 தொகுதியிலும் தோல்வியை சந்திக்கும். தி.மு.க சேப்டர் குளோஸ் ஆகிடும். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமில்லை என்பதை காட்ட ஸ்டாலின் பத்திரத்தை தான் வெளியிட வேண்டும். பட்டா எப்படி வேண்டுமானாலும் மாற்றப்படலாம். அதனால் திமுக சொத்துக்கள் பற்றி விசாரிக்க முதல்வர் உத்தரவிடனும்.

இந்து விரோதமாக பேசுவது, நடப்பது திமுகவுக்கு பழக்கமாக உள்ளது. நாங்குநேரியில் சர்ச்சில் போய் ஓட்டுக் கேட்கிறார். திருவரங்கத்தில் வைத்த குங்குமத்தை அழித்துவிட்டு. அதனால் இந்து விரோத தீயசக்திகளை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

arrest seeman Pudukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe