Skip to main content

7 பேரை விடுதலை செய்ய சொல்றது தமிழ் உணர்வா? சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யனும்- எச்.ராஜா பேட்டி!

Published on 20/10/2019 | Edited on 20/10/2019

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் பேரணி இன்று நடந்தது. இந்த பேரணியில் கலந்து கொண்ட பா.ஜ.க தேசிய தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசும் போது,

சீமான் போன்ற தேசத் துரோகிகளை கைது செய்ய வேண்டும் என்று ஊடகங்கள் விவாதிக்க வேண்டும்.யாரோ புள்ளை பெத்தா சீமான் இன்சியல் போட்டுக்குவாரா?

தமிழ் இனத்தை அழிப்பார் இந்த சீமான். காங்கிரஸ்காரங்க எப்ப இந்த நாட்டுக்காக பேசி இருக்காங்க. என்றைக்கு இந்த மண்ணில் பிறக்காதவரை தலைவர் என்று சொன்னார்களோ அப்போதே அவர்களுக்கு இந்த மண் மீது பக்தி இல்லை. சீமான் போன்ற தீய சக்தி, பிரிவினைவாத சக்திகள்  தமிழக இளைஞர்களை திசை திருப்புகிறார்கள். அதனால் அவரால் மிகப் பெரிய யுத்தத்திற்கு தமிழகம் தயாராக இருக்க வேண்டி இருக்கும். 

H RAJA INTERVIEW IN PUDUKOTTAI

சீமானை உடனே கைது செய்யனும். பச்சை தேச துரோகி. தமிழக அரசு அவரை கைது செய்து சிறையில் அடைக்கனும் என்று சொல்லி இருக்கிறேன். ஈழத்தமிழர்களு்காக சீமான் என்ன செய்திருக்கிறார். எள் முனையளவும் நல்லது செய்யல. இலங்கை பிரச்சனைக்காக என்ன செய்த்திருக்கிறார்.? ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட போது தமிழக போலீசார் செத்திருக்காங்க. அதனால அந்த 7 பேரை விடுதலை செய்ய சொல்றது தமிழ் உணர்வா, தேசத் துரோகிகள். அதனால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யனும்.

தி.மு.க 2 தொகுதியிலும் தோல்வியை சந்திக்கும். தி.மு.க சேப்டர் குளோஸ் ஆகிடும். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமில்லை என்பதை காட்ட ஸ்டாலின் பத்திரத்தை தான் வெளியிட வேண்டும். பட்டா எப்படி வேண்டுமானாலும் மாற்றப்படலாம். அதனால் திமுக சொத்துக்கள் பற்றி விசாரிக்க முதல்வர் உத்தரவிடனும்.

இந்து விரோதமாக பேசுவது, நடப்பது திமுகவுக்கு பழக்கமாக உள்ளது. நாங்குநேரியில் சர்ச்சில் போய் ஓட்டுக் கேட்கிறார். திருவரங்கத்தில் வைத்த குங்குமத்தை அழித்துவிட்டு. அதனால் இந்து விரோத தீயசக்திகளை மக்கள் ஏற்கமாட்டார்கள்.  
 
சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.