/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tamimmun ansari 444.jpg)
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக தலைவர் கலைஞர் அவர்கள் குறித்து மறைமுகமாக ட்விட்டரில் பாஜகவின் தேசிய செயலாளர் H. ராஜா வெளியிட்ட கருத்து அநாகரீகத்தின் உச்சமாகும். கலைஞர் உடல் நலமின்றி, அரசியலிருந்து ஏறத்தாழ ஒதுங்கியிருக்கும் நிலையில் அவர் மீது தொடுத்திருக்கும் தனி நபர் தாக்குதல்கள் வெறுப்பு அரசியலின் வெளிப்பாடாகும். அக்கருத்துகளை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
நாகரீக வளர்ச்சியின் வழியாகவே, அரசியல் முதிர்ச்சியும், பண்பாடும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தனிநபர் விமர்சனங்களும், தனி நபரை வீழ்த்த முன்னெடுக்கப்படும் தரங்கெட்ட முயற்சிகளும் பொது வாழ்வுக்கு எந்த விதத்திலும் சிறப்பு சேர்க்காது. கொள்கை ரீதியான விமர்சனங்கள் மட்டுமே, ஒருவரின் அரசியல் தரத்தை மதிப்பீடு செய்யும் என்பதை அனைவரும் உணர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
Follow Us