Advertisment

’திகவுடனான தொடர்புகளை திமுக முறித்துக் கொள்ளவில்லை என்றால்..’ -எச்.ராஜா 

ர்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக சிவகங்கையில் பாஜக பிரச்சாரம் மேற்கொண்டது. இதில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். பிரச்சாரம் முடிந்த பின்னர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Advertisment

அப்போது அவர், ‘’ரஜினிகாந்த் ஆதாரம் இல்லாமல் பேசவில்லை. அன்று நடந்ததைதான் பேசியுள்ளார். அவர் மீது வழக்கு தொடுத்தால் கடவுளர்களை கேவலப்படுத்திய தி.கவின் கி.வீரமணிதான் சிறைக்கு செல்ல வேண்டியதிருக்கும், திகவுடனான தொடர்புகளை திமுக முறித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்’’என்று தெரிவித்தார்.

Advertisment

அவர் மேலும், ‘’ தி.க.வின் நிலைமை தற்போது ஆப்பசைத்த குரங்குபோல் உள்ளது. ஈவெரா அன்றைக்கு இந்து கடவுள்களை இழிவுபடுத்தியதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. வழக்குக்கு சென்றால் அவர்கள்தான் உள்ளே செல்வார்கள்.

இந்து கடவுளை இழிவுப்படுத்தி எதிர்வினை பெற்ற வீரமணி மன்னிப்பு கேட்காதபோது, நாகரிகம், பண்பாடு குறித்து ரஜினிக்கு பாடம் எடுக்கலாமா வீரமணி? அவரவர் செய்த வினைக்கு எதிர்வினை நிச்சயம் உண்டு. திகவுடனான தொடர்பை திமுக முறிக்கவில்லை என்றால் விரைவில் மிக பெரிய விளைவுகளை சந்திக்கும்’’ என்றார்.

H Raja
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe