Advertisment

ஜி.வி.பிரகாஷிற்கு சமூக சேவைக்காக  கௌரவ டாக்டர் பட்டம் !!!

தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என்று கலக்கிக்கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். நாச்சியார் படத்தின் வெற்றியைத்தொடர்ந்து அடங்காதவன், 4ஜி, சர்வதாளமயம், செம என்று அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஆனால் இவையெல்லாம்ஒருபுறம் இருந்தாலும் சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதில் முதன்மையானவராக திகழ்ந்துவருகிறார்.

Advertisment

 G.V.Prakash received doctorate for social service !!!

இவரின் சமூகப்பணி ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து நீட், கதிராமங்கலம், நெடுவாசல், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு வரை இவரின் குரலையும், ஆதரவையும்வலுவாக கொடுத்து வந்தார். இந்நிலையில் இவரின் சமூக சேவையை கௌரவிக்கும் விதமாக செயின்ட் ஆண்ட்ரீவ் இறையியல் பல்கலைக்கழகம் ஜி.வி.பிரகாஷிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.இதற்கு முன் நடிகர் விஜய்க்கு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம்கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment
g.v.prakash
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe