Skip to main content

ஜி.வி.பிரகாஷிற்கு சமூக சேவைக்காக  கௌரவ டாக்டர் பட்டம் !!!

Published on 18/05/2018 | Edited on 18/05/2018

தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என்று கலக்கிக்கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். நாச்சியார் படத்தின் வெற்றியைத்தொடர்ந்து அடங்காதவன், 4ஜி, சர்வதாளமயம், செம என்று அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஆனால் இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதில் முதன்மையானவராக திகழ்ந்துவருகிறார்.

 G.V.Prakash received doctorate for social service !!!

 

இவரின் சமூகப்பணி ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து நீட், கதிராமங்கலம், நெடுவாசல், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு வரை இவரின் குரலையும், ஆதரவையும் வலுவாக கொடுத்து வந்தார். இந்நிலையில் இவரின் சமூக சேவையை  கௌரவிக்கும் விதமாக செயின்ட் ஆண்ட்ரீவ் இறையியல் பல்கலைக்கழகம் ஜி.வி.பிரகாஷிற்கு    கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இதற்கு முன் நடிகர் விஜய்க்கு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சருடன் பிரபல இசையமைப்பாளர் திடீர் சந்திப்பு

Published on 04/11/2022 | Edited on 04/11/2022

 

 

A famous musician has a surprise meeting with the Union Minister!

 

மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறையின் இணையமைச்சர் டாக்டர் எல்.முருகனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நேற்று (03/11/2022) மாலை 05.00 மணியளவில் நேரில் சந்தித்துப் பேசினார்.

 

அப்போது, சூரரைப்போற்று திரைப்படத்தின் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்றதற்காக மத்திய அமைச்சரிடம் ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து பெற்றார்.

 

 

Next Story

'எல்லாம் கிருபை கிருபை கிருபை...' - கவனம் ஈர்க்கும் அசோக் செல்வன் பட ட்ரைலர்

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

'Everything is kirubai ...' - Attractive Ashok Selvan movie trailer

 

மன்மத லீலை படத்தை தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் வெளிவரும் திரைப்படம் 'ஹாஸ்டல்'. அசோக் செல்வனுக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார். சதீஷ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர்.ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார். சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.  இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. வரும் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி திரையரங்கில் இப்படம் வெளியாகிறது.

  

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதனை ஜி.வி பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கல்லூரி மாணவர்களின் ஹாஸ்டல் வாழ்க்கையை காமெடி கலந்த திகில் ஜானரில் இப்படம் உருவாகியுள்ளது. 2015-ல் மலையாளத்தில் வெளியான 'அடி கப்யரே கூட்டமணி' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.