
நெல்லையில் மினி லாரியில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தப்பட்ட நிலையில் குட்காவையும் மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் உள்ள கடைகளில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி கண்டெய்னர் லாரியை பிடித்து சோதனை செய்த பொழுது மினி லாரியில் ரகசிய அறை வைக்கப்பட்டு அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 574 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Follow Us