புவனேஸ்வர் - ராமேஸ்வரம் ரயிலில் கடத்தப்பட்ட குட்கா பொருட்கள்! 

Gutka items on Bhubaneswar-Rameeswaram train

ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் பகுதியிலிருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு அதிவேக ரயில் இயக்கப்பட்டுவருகிறது.அந்த ரயில், திருச்சி வழியாக ராமேஸ்வரம் சென்றடையும். அந்தச் சிறப்பு ரயில், திருச்சி ரயில் நிலையத்தின் 5வது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது ரயில்வே பாதுகாப்புப்படை குற்றப்புலனாய்வுத் துறையினர் அந்த ரயிலில் ஏறி வழக்கமான சோதனை நடத்தினார்கள்.அப்போது எஸ்-9 பெட்டியின் கதவு பின்புறத்தில் ஒரு அட்டைப்பெட்டி, 2 பிளாஸ்டிக் பைகள் இருந்தன. அவற்றை திறந்து பார்த்தபோது அதில் பான்மசாலா உள்ளிட்ட 20 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை ரயில்வே பாதுகாப்புப்படை குற்றப்புலனாய்வுத் துறையினர், போதை தடுப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Rameswaram
இதையும் படியுங்கள்
Subscribe