Advertisment

வாடகைக்கு வீடு எடுத்து குட்கா பதுக்கல்... போலீஸ் விசாரணை!

வாடகைக்கு வீடு எடுத்து குட்கா பதுக்கல்... போலீஸ் விசாரணை!

Advertisment

தமிழகத்தில் அவ்வப்போது போலீசார் சோதனையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி வயலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் உறையூர் காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வயலூர் சாலையில் உள்ள ராமலிங்க நகர் 5 வது தெருவில் உள்ள பக்ருதீன் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து அதில் குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் சோதனையிட்டு 20 மூட்டைகளைக் கைப்பற்றி அதை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். கைப்பற்றப்பட்ட குட்காசுமார் 100 கிலோவுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் பக்ருதீன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள பக்ருதீனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

gutka police thiruchy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe