Advertisment

விபத்துக்குள்ளான காரில் குட்கா மூட்டைகள்... போலீசார் வழக்குப்பதிவு

 Gutka bags in the car that crashed... Police registered a case

திண்டுக்கல் மாவட்டத்தில் விபத்துக்குள்ளான கார் ஒன்றில் இருந்து குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே லட்சுமணன்பட்டி நான்கு வழிச்சாலை பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவ்வழியாக ரோந்து சென்று கொண்டிருந்த காவல்துறையினர் விபத்துக்குள்ளான காரை மீட்க முயன்றனர். அப்பொழுது விபத்துக்குள்ளான காரில் குட்கா இருந்தது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் காரில் இருந்தவர்கள் தப்பி ஓடிய நிலையில், காரில் இருந்த குட்கா மூட்டைகளைப் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் தூத்துக்குடியில் கூரியர் வாகனத்தில் 2 கோடி ரூபாய் மதிக்கத்தக்க கஞ்சாகடத்த முயன்றது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

Advertisment

gutka police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe