குட்கா விவகாரம் தொடர்பான வழக்கில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று ஆஜரானார்.
குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், சார்ஜ் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று காலை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.