குட்கா ஊழல் விவகாரத்தில் சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றிய உயரதிகாரிகளிடம் சிபிஐ விசாரணையை தொடங்கியது.
அந்த விசாரனையில் குட்கா முறைகேடு தொடர்பான 2013ம் ஆண்டில் இருந்து 2016ம் ஆண்டு வரை காவல்துறையில் பணியாற்றியவரகளை விசாரணைக்காக அழைத்திருந்தது. அதன் பேரில் காவல் துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன், சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர், டி.ஐ.ஜி ஜோஷி நிர்மல் குமார் ஆகியோர் நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் ஆஐராயினர். நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலத்தில் மூவரிடமும் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
இந்த விசரானையில் அனைத்து கேள்விக்கும் பதில் சொன்னதாகவும் இருந்தாலும் முக்கியமான லஞ்சம் தொடர்பான விவகாரத்தில் தனக்கு எந்தவிதமான சம்மந்தமில்லை என்பது போன்றே பதில் கொடுத்துள்ளனராம்.