/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-17_15.jpg)
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வெயில் தாக்கம் அதிகரித்து 109 ஃபாரன் கீட்டைத்தாண்டி வெப்பம் பதிவாகி பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். கடந்த ஒரு வார காலமாக திடீரென ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து இதனால் சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திருப்பத்தூர் அதன் சுற்றியுள்ள பகுதியிலான ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை, குரிசிலாப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தற்பொழுது ஏலகிரி மலையின் தொடர்ச்சியில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது இதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அப்பகுதிக்கு பொதுமக்கள் படையெடுத்துள்ளனர் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)