Advertisment

செந்துறையில் பல்லவன், வைகை, குருவாயூர் விரைவு ரயிலை நிறுத்தி செல்ல கோரிக்கை

செந்துறை ஒன்றிய மதச்சார்பற்றமுற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திமுக ஒன்றிய அலுவலகத்தில் (1-9-2019 ) திமுக ஒன்றிய செயலாளர் (வடக்கு)மு. ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

Advertisment

sendurai

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத் தலைநகராக இருப்பதாலும், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் , தாபழூர் , வேப்பூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த மக்கள் சென்னை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களுக்கு சென்றுவர ஏதுவாக செந்துறை தொடர்வண்டி நிலையத்தில் பல்லவன், வைகை, குருவாயூர் விரைவு தொடர்வண்டிகளில் ஏதேனும் ஒன்றை நிறுத்தி செல்லவேண்டும்.

ஈச்சங்காடு தொடர்வண்டி நிலையத்தில் கொல்லம் விரைவு தொடர்வண்டியை நிறுத்தி செல்லவும் தொடர்வண்டி நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என இந்தக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது என இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

மேலும்,செந்துறை தொடர்வண்டி நிலைய அதிகாரியிடம் செந்துறை ஒன்றிய மதச்சார்பற்ற

முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் தீர்மான நகலை வழங்கினர்.

Request stop express train sendurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe