Skip to main content

செந்துறையில் பல்லவன், வைகை, குருவாயூர் விரைவு ரயிலை நிறுத்தி செல்ல கோரிக்கை

Published on 03/09/2019 | Edited on 03/09/2019

 

செந்துறை ஒன்றிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திமுக ஒன்றிய அலுவலகத்தில் (1-9-2019 ) திமுக ஒன்றிய செயலாளர் (வடக்கு) மு. ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. 

 

sendurai


 

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத் தலைநகராக இருப்பதாலும், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் , தாபழூர் , வேப்பூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த மக்கள் சென்னை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களுக்கு சென்றுவர ஏதுவாக செந்துறை தொடர்வண்டி நிலையத்தில் பல்லவன், வைகை, குருவாயூர் விரைவு தொடர்வண்டிகளில் ஏதேனும் ஒன்றை நிறுத்தி செல்லவேண்டும். 


 


ஈச்சங்காடு  தொடர்வண்டி  நிலையத்தில் கொல்லம் விரைவு தொடர்வண்டியை நிறுத்தி செல்லவும் தொடர்வண்டி நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என இந்தக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது என இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 

மேலும், செந்துறை தொடர்வண்டி நிலைய அதிகாரியிடம் செந்துறை ஒன்றிய மதச்சார்பற்ற 
முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் தீர்மான நகலை வழங்கினர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மேற்குவங்க மாநிலத்தில் விரைவு ரயில் தடம் புரண்டது!

Published on 13/01/2022 | Edited on 13/01/2022

 

Bikaner Express derailed near Domohani incident police investigation

 

மேற்குவங்கம் அருகே கவுகாத்தி- பிகானர் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

 

ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானரில் இருந்து அசாம் மாநில தலைநகர் கவுகாத்தி நோக்கிச் சென்று கொண்டிருந்த  விரைவு ரயில் மேற்குவங்கம் மாநிலம் தோமோஹனி அருகே உள்ள ஜல்பைகுரியில் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 4 நான்கு பெட்டிகள் கவிழ்ந்ததாக தகவல் கூறுகின்றன. 

 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், ரயில்வே காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுடன் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் மூன்று பயணிகள் உயிரிழந்த நிலையில், 20 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. 

Bikaner Express derailed near Domohani incident police investigation

ரயில் விபத்து குறித்து, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வை தொடர்புக் கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். 

 

வடகிழக்கு எல்லை ரயில்வே, (கவுகாத்தி) தலைமை பிஆர்ஓ குனித் கவுர் (Guneet Kaur, Chief PRO, North- East Frontier Railway) கூறுகையில், "மாலை 05.00 மணியளவில் விபத்து ஏற்பட்டது. சுமார் 10 பெட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளன. விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 20 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் வழங்கப்படும். மீட்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. பாதிக்கப்பட்ட பயணிகளை எங்கள் குழுக்கள் வெற்றிகரமாக மீட்டுள்ளன" எனத் தெரிவித்தார். 


 

Next Story

தொடங்கியது மலைக்கோட்டை விரைவு ரயில் சேவை...

Published on 22/06/2021 | Edited on 22/06/2021

 

Mountain Fort Express train service started

 

தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தனர். எனவே பயணிகளின் வருகை மிகவும் குறைவாக இருந்ததால் தென்னக ரயில்வே பத்துக்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை ரத்து செய்திருந்தது. குறிப்பாக மலைக்கோட்டை விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்றுமுதல் (21.06.2021) மலைக்கோட்டை விரைவு ரயில் இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்தது. நேற்று இரவு திருச்சியில் இருந்து 10.30 மணிக்கு புறப்பட்ட மலைக்கோட்டை ரயில் சென்னை சென்றடைந்தது.