/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/j guru pmk 600.jpg)
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பாமக முன்னாள் எம்எல்ஏ குரு. மருத்துவமனையில் உள்ள குருவின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் மருத்துவர்களிடம் கேட்டறிந்து வருகிறார்.
இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சைப்பிரிவு மூத்த மருத்துவர் ராஜ் பி.சிங், தீவிர இருதய நோய் சிகிச்சை வல்லுனர் சாய் சதீஷ், பல்துறை தீவிர சிகிச்சைப்பிரிவின் மூத்த மருத்துவர் ரமேஷ் வெங்கட்ராமன், பல்துறை தீவிர சிகிச்சைப்பிரிவின் பொறுப்பு மருத்துவர் பரத், மூத்த மருத்துவர் வெங்கடாச்சலம், சிறுநீரக அறுவை சிகிச்சையியல் மருத்துவர் ஜெய கணேஷ், மூத்த மருத்துவர் நல்லி யுவராஜ் உள்ளிட்ட 9 மருத்துவர்கள் அடங்கிய குழுவுடன் அன்புமணி இராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைகளின் போது குருவின் குடும்ப உறுப்பினர்களும் உடனிருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)