Advertisment

குரு பெயர்ச்சி... எடப்பாடி குடும்பம் பரிகார பூஜை...

temple

இன்று ராகு கேது குரு பெயர்ச்சி நாள் என்ற நம்பிக்கையால் கோயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஈரோடு காரை வாய்க்கால் சுயம்பு நாகர்கோயிலில் ஆண்கள், பெண்கள் அதிக அளவில் வந்தனர். ராகு கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு சென்றுள்ளார். அதேபோல் கேது மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்து போயுள்ளதாக ஜாதக,ஜோதிட நிபணர்கள் கூறியுள்ளார்கள். அதன்படி அந்த ராசியை சேர்ந்தவர்கள் சிறப்பு பரிகார பூஜைகளும் செய்தனர்.

Advertisment

குறிப்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினர் பலர் குரு பெயர்ச்சி பரிகார பூஜை செய்தனர். அமைச்சர் பவானி கருப்பணன் குடும்பத்தினர், குரு பெயர்ச்சிப்படி கருப்பனன் ராசிக்கு எதிராக உள்ளது என்று மூன்று கோயில்களில் பரிகார பூஜைகள் செய்துள்ளார்கள். இது பற்றி அ.தி.மு.க. ர.ர.க்கள் கூறும்போது அமைச்சர் கருப்பணனுக்கு கிரக நிலை சரியில்லை, பார்ப்போம் இந்த பரிகார பூஜையால் அமைச்சர் பதவி நீடிக்குமா என்பதை என்றனர். முதல்வர் எடப்பாடி குடும்பத்தினரும் எடப்பாடி ஊரை அடுத்துள்ள தேவூர் கிராமத்திற்கு அருகே உள்ள அவர்களது குடும்ப குலதெய்வ கோயிலில் சிறப்பு பரிகார பூஜைகள் செய்து வழிபட்டனர்.

Advertisment

guru Guru Peyarchi Palangal 2018 temple
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe