குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்க இடம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.
சென்னை தேனாம்பேட்டையில் சீக்கிய குருத்வாராவில் முதல்வர் பழனிசாமி வழிபாடு நடத்தினார். அதன் பிறகு சீக்கிய மதகுரு குருநானக்கின் 550 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர், ராமேஸ்வரத்தில் குருநானக்கின் நினைவு மையம் அமைக்க தமிழக அரசு இடம் வழங்கும் என்று அறிவித்துள்ளார்.