Advertisment

அபாகஸ் போட்டியில் உலக சாதனை-கலக்கும் சென்னை சிறுவன்!

Guru Deepak sets world record in abacus

சென்னையைச்சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர்அபாகஸ்அடிப்படையிலான மனஎண்கணிதவகுத்தல் போட்டியில் புதியஉலகசாதனைபடைத்துள்ளார்.

Advertisment

சென்னை,முகப்பேர்கிழக்குபகுதியைச்சேர்ந்த நரேந்திர குமார், ஸ்ரீதேவி தம்பதியரின் மகனான குரு தீபக் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஆறாம் வகுப்பு படிப்பதிலிருந்தேஅபாகஸ்எண்கணிதபயிற்சியை மேற்கொண்டு வரும் இவர்,எண்கணிதவியல்தொடர்பான பல்வேறு போட்டிகளில் கடந்த நான்குஆண்டுகளாகப்பங்கேற்று வருகிறார். அந்தவகையில், மிகக்குறைந்த நேரத்தில்கணக்கீட்டுக்கருவிகள் எதனையும் பயன்படுத்தாமல் அதிக எண்ணிக்கையிலான வகுத்தல்கணக்குகளுக்குத்தீர்வு காணும்உலகசாதனைமுயற்சியில் அவர் அண்மையில் பங்கேற்றார்.

Advertisment

கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி நடைபெற்ற இதற்கான முயற்சியில் கலந்துகொண்ட மாணவர் குரு தீபக், ஆடவருக்கான தனிநபர் பிரிவில் ஐந்து நிமிடங்களில் 63 மூன்றிலக்க எண்களின்வகுத்தலுக்குச்சரியானதீர்வுகளைக்கண்டறிந்தார். இதுவே இப்பிரிவில் ஒருவர் தீர்வு கண்டறிந்த அதிகபட்ச கணக்குகளின் எண்ணிக்கை ஆகும். இதன் அடிப்படையில்,எலைட்உலக சாதனை புத்தகத்திலும், இந்தியாரெக்கார்டஸ்அகாடெமிசாதனை புத்தகத்திலும் மாணவர் குரு தீபக் இடம்பிடித்துள்ளார்.

Guru Deepak sets world record in abacus

இது குறித்துசிறுவனின்தந்தை நம்மிடம்கூறுகையில், ''அபாகஸில்உள்ள எட்டுஸ்டேஜ்களையும்என் மகன் முடித்துள்ளார். இதற்காக அவரது அகாடெமிக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம். குரு தீபக்கின் இந்த சாதனைக்கு அவரது அம்மா ஒரு முக்கிய காரணம்.அவர்தான் அவனிடம் இருந்த இந்ததிறமையைக்கண்டறிந்தார். இதற்கு முன்னர் குருதீபக்,தென்இந்தியஅளவில் நிறையபதக்கங்களைவென்றுள்ளார். அடுத்து ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வைக்கமுயற்சி எடுத்து வருகிறோம்'' என்றார்.

children student maths grade 1exam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe