தேர்தலுக்கு முன் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்; போலீசார் அறிவுறுத்தல்

publive-image

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாநகரம், மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதனை ஒப்படைக்க வேண்டும் என்று போலீசாரால் அறிவுறுத்தப்பட்டது. திருச்சி மாநகரத்தில் தற்போது லைசன்ஸ் பெற்று 335 பேர் துப்பாக்கி வைத்துள்ளனர். அதில் 260 பேர் துப்பாக்கியை ஒப்படைத்துள்ளனர். 75 பேர் துப்பாக்கியை ஒப்படைக்காமல் உள்ளனர்.

இதே போல திருச்சி புறநகர் பகுதியில் லைசன்ஸ் பெற்று 350 பேர் துப்பாக்கி வைத்துள்ளனர். அவர்களில் 264 பேர் துப்பாக்கியை ஒப்படைத்துள்ளனர். 86 பேர் துப்பாக்கியை ஒப்படைக்காமல் உள்ளனர். இதுவரை 524 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 161 துப்பாக்கிகள் வராத காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ரிப்பேருக்கு அனுப்பப்பட்டுள்ளது, துப்பாக்கி உரிமையாளர்கள் வெளியூருக்கு சென்றிருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறியது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தேர்தலுக்குள் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

elections police trichy
இதையும் படியுங்கள்
Subscribe