
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கரோனாவிற்கு ஆளான மக்கள் களப்பணியாளர்கள் சிலரும் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது சென்னையை அடுத்த குன்றத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டி முனி உயிரிழந்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டி முனி தற்பொழுது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.