Virudhachalam

Advertisment

விவசாய மோட்டார் கொட்டகையில் வேட்டையாட வைத்திருந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் நல்லூர் கிராமத்தில் பாஸ்கர் என்பவரின் விவசாய மோட்டார் கொட்டகையில் வேட்டையாட பயன்படுத்தும் நாட்டுத்துப்பாக்கி இருப்பதாக விருத்தாசலம் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து திடீரென ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது வேட்டைக்கு பயன்படுத்தப்படும் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. யாருடைய நாட்டுத்துப்பாக்கி? எப்படி மோட்டார் கொட்டகைக்கு வந்தது? யார் பயன்படுத்துவது? என பல கோணங்களில் விருத்தாசலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மோட்டார் கொட்டகையின் உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisment

நாடு முழுவதும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்புடன் இருக்கும் நிலையில் நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.