Advertisment

லாட்ஜில் துப்பாக்கி; வடமாநில நபரை தேடும் போலீசார்

 Gun in Lodge; Police are looking for a northern man

ஈரோடு சத்தி சாலையில் தனியார் லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. அந்த லாட்ஜில் நேற்று மாலை வடமாநில நபர் தங்கியிருந்த அறையை, லாட்ஜ் ஊழியர் சுத்தம் செய்ய உள்ளே சென்றனர். அப்போது படுக்கையில் தலையணைக்கு அடியில்‌ துப்பாக்கியும், தோட்டக்களும் இருந்தது. இதைப் பார்த்து லாட்ஜ் ஊழியர்‌ அதிர்ச்சியடைந்த நிர்வாகத்தினர் காவல் துறைக்குதகவல் தெரிவித்தனர். உடனேஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அங்கிருந்த துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில், அந்த துப்பாக்கி வடமா நிலங்களில் பயன்படுத்தப்படும் நாட்டு கைத்துப்பாக்கி என்பது தெரியவந்தது.

Advertisment

தொடர்ந்து அந்த அறையில் தங்கியிருந்த நபர் குறித்து லாட்ஜ் நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கியூ பிரிவு போலீசார் லாட்ஜில் வந்து நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபர் ஏதாவது சதித் திட்ட செயலில் ஈடுபட வந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். லாட்ஜில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். லாட்ஜில் பதிவேட்டில் அந்த நபரின்போன் நம்பர் மற்றும் முகவரி உள்ளது. அதனைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். லாட்ஜில் துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment
Erode gun lodge police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe