கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கையில் துப்பாக்கி! -ஜேம்ஸ்பாண்ட் ஆன விநோதம்!

சிவகாசி – விருதுநகர் சாலையில் அரசன் மாதிரிப்பள்ளி மற்றும் அரசன் கல்வியியல் கல்லூரி உள்ளது. அதன் வளாகத்தில், விருதுநகர் மாவட்ட துப்பாக்கி சுடும் பயிற்சி கழகம் சார்பில் 10 மீ. தூரம் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மற்றும் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று நடந்தது.

Gun in the hands of KT Rajendrapalaji!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தலைமை தாங்கிய இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு, பயிற்சி கட்டிடத்தின் கல்வெட்டையும் கட்டிடத்தையும் திறந்து வைத்ததோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் பயிற்சிக்காக வைத்திருந்த துப்பாக்கியைக் கையில் எடுத்து, ஒரு கண்ணால் இலக்கை நோக்கிச் சுட்டார். துப்பாக்கி சுடுதலில் காட்டிய ஆர்வத்தால் அமைச்சர் குறி தப்பவில்லை. நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் இதுகுறித்துச் சிலாகித்தபோது, அமைச்சர் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம்!

Gun in the hands of KT Rajendrapalaji!

மேடையில் வார்த்தைகளால் கண்டமேனிக்கு சுட்டுக்கொண்டிருந்த ராஜேந்திரபாலாஜி, துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நேர்த்தியாகப் பயன்படுத்திக்கொள்ள, அவரது விசுவாசிகள் “அண்ணனோட லெவலே வேற.. துப்பாக்கியால் சுடும்போது பாண்ட்.. ஜேம்ஸ்பாண்ட்-ன்னு அவரு சொல்லல. அந்த ஒரு குறைதான்.. ஆனா.. ஜேம்ஸ்பாண்டாவே மாறிட்டாரு.’ என்று தங்கள் பங்கிற்கு குஷியை வெளிப்படுத்தி குதூகலித்தனர்.

admk minister rajendrabalaji
இதையும் படியுங்கள்
Subscribe