தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன் குட்கா பதுக்கலில் அமைச்சா்கள் முதல் காவல்துறை உயா் அதிகாாிகளின் தொடா்பு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் விசாரணை கூட சிபிஐ வசம் உள்ளது.

Advertisment

இந்தநிலையில் பெங்களூரு, மும்பை மற்றும் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்படும் குட்கா புகையிலை பொருட்கள் குடோன்களில் பதுக்கல் செய்யப்பட்டியிருப்பதும், மேலும் விற்பனையிலும் கொடிகட்டி பறக்கிற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

 Gudka sales in kumari

மாா்த்தாண்டத்தில் 1 கோடி ருபாய் மதிப்பில் பதுக்கி வைத்தியிருந்த குட்காவை போலிசாா் கண்டுபிடித்தனா்.நேற்று நாடு முமுவதும் புகையிலை தடுப்பு தினம் கொண்டாடப்பட்ட நிலையில் போலிசாாின் அதிரடி நடவடிக்கையால் குட்காவில் கொடிகட்டி பறந்த கும்பலை கைது செய்தனா்.

மாா்த்தாண்டத்தில் பழ குடோன் என்ற போா்வையில் குட்கா குடோன் அமைத்து தமிழகம் மற்றும் கேரளாவுக்கு சொகுசு காாில் சென்று சப்ளை செய்து வந்துள்ளனா். மேலும் குமாியில் சாதாரண பெட்டி கடைகளில் இருந்து பொிய சூப்பா் மாா்கெட் வரை இங்கிருந்து குட்கா சப்ளை செய்யபட்டுள்ளது. இதற்கு போலிசாா் சிலரும் மாமூல் வாங்கி கொண்டு இந்த கும்பலுக்கு உடந்தையாக இருந்துள்ளனா்.

Advertisment

 Gudka sales in kumari

இந்த நிலையில் பொதுமக்களிடமிருந்து தொடா்ந்து வந்த புகாாின் அடிப்படையில் தக்கலை சரக காவல் துணை கண்காணிப்பாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலிசாாின் அதிரடி நடவடிக்கையால் காங்கிரஸ் பிரமுகா் செல்வராஜின் 2 குட்கா குடோன்களை கண்டுபிடித்து அதற்கு சீல் வைத்ததோடு, செல்வராஜையும் கைது செய்தனா். மேலும் மாா்த்தாண்டத்தில் கடையில் வைத்து மொத்த விற்பனை செய்து வந்த அதிமுக பிரமுகா் சத்திய நேசன், மற்றும் ஆனந்த சத்யா, வெளி மாநில விற்பயைாளா் முகம்மது அலியையும் கைது செய்தனா்.