ramana

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.

Advertisment

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் இயங்கி வந்த குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, உரிமையாளர் மாதவராவை விசாரணை நடத்தினர்.

Advertisment

கடந்த அதிமுக ஆட்சியின்போது வணிகவரித்துறை அமைச்சராக இருந்த ரமணாவுக்கும் குட்கா ஊழலில் தொடர்பு இருப்பதாக மாதவராவ் வாக்குமூலம் அளித்திருந்தார். அதை தொடர்ந்து, அவரது வீட்டிலும் சோதனை நடந்தது. இதனால் ரமணா இன்று பிற்பகலில் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து ரமணா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.